நோக்கு
பொதுமக்களுக்கான கடப்பாட்டுக்கும் பொறுப்புக்கூறலுக்குமான அர்ப்பணித்த உயர்தரமான கணக்காய்வுச் சேவை
செயற்பணி
தொழில்சார் நிபுணத்துவம்இ தேர்ச்சி மற்றும் புத்தாக்கத்துடன் கூடிய நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்ட அரச கணக்காய்வு சேவையினை நிறுவுவதன் மூலம் அரச உடமைக்கு பொறுப்புக்கூறல
எமது மதிப்புகள்சுயாதீனத் தன்ம
-
நடு நிலமை
-
நேர்மை
-
புத்தாக்கம்
-
வெளிப்படைத் தன்மை
-
பொறுப்புக்கூறல்
-
தொழிற்திறன்
இலங்கை ஜனநாயக சோஷலிசக்குடியரசின் அரசியலமைப்பின் XVII ஆம் அமைப்பின் பிரகாரம் 153 A(1) இன் பிரகாரம் உருவாக்கப்பட்ட கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 153 A(1) இன் பிரகாரம் கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக செயற்படும் கணக்காய்வாளர் தலைமை அதிபதி அவர்களினாலும் அரசியலமைப்பு சபையின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்படும் கீழ் குறிப்பிடப்படும் அங்கத்தினரை உள்ளடக்கியதாக ஆணைக்குழு அமையப்பெற்றுள்ளது.
- பிரதி கணக்காய்வாளர் அல்லது அதற்கு மேல் பதவி வகுக்கும் கணக்காய்வு திணைக்களத்தின் ஓய்வு பெற்ற இரு உத்தியோகத்தர்கள்
- இலங்கை உயர்நீதி மன்றத்தின் அல்லது மேன் முறையீட்டு நீதி மன்றத்தின் ஒய்வு பெற்ற இரண்டு நீதிபதிகள்
- இலங்கை நிருவாக சேவையில் ஓய்வு பெற்ற முதலாம் தர உத்தியோகத்தர் ஒருவர்
அரசியலமைப்பின் 153H பிரிவிற்கமைய கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவினால் ஒவ்வொரு வருடத்திற்கொருமுறை பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன் பிரகாரம் 2016 ஆம் வருடத்திற்காக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் கடமைகளும், பொறுப்புகளும்
அரசியலமைப்பின் 153 C(1)இன் ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை அரச கணக்காய்வு சேவைக்கு உறுப்பினர்களை நியமித்தல், பதவியுயர்வு, இடமாற்றம், ஒழுக்க நிருவாகம் மற்றும் பணி நீக்கம் சம்பந்தமான பொறுப்பு கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக 153(A)இன்(2) (A)வின் ஏற்பாடுகளுக்கமைய அமைச்சரவையினால் தீர்மானிக்கப்படும் கொள்கைகளுக்கு அமைய இலங்கை அரச கணக்காய்வு சேவைக்குறிய உறுப்பினர்களை சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான முறைமை, நியமனம், இடமாற்றம்,பதவியுயர்வு, ஒழுக்க விதி,மற்றும் அங்கத்தவர்களை பணி நீக்கம் தொடர்பிலான சட்ட திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு வசம் காணப்படுகிறது .
இன்னும் சட்டத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு காரியாலயத்தின் வருடாந்த கணிப்பு தயாரித்தல் மற்றும் சட்டத்தினால் அமுல் செய்யப்படும் வேறு கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற இந்த ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.